வாஜ்பாயின் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் 94 ஆவது பிறந்த தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்டு மாதம் 16 ஆம் திகதி தனது 93 வயதில் உயிரிழந்தார்.

அவரது நினைவை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

வாஜ்பாயின் 94 ஆவது பிறந்த தினம் நாளை  கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது.

வாஜ்பாய் உருவம் கொண்ட 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டது. அதன் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் 1924-2018 என்று பொறிக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் மூன்று சிங்கங்கள் இருப்பதுபோன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் “சத்யமேவ ஜெயதே” என்று தேவநாகரி மொழியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment