கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் மகளுக்கு அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தில் மின்சாரம் தாக்கி புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த என். திருச்செல்வம் என்பவர் உயிரிழந்தார்.
இந்தக் குடும்பத்தில் ஆண்பிள்ளை ஒன்று மாவீரர் ஆன நிலையில், மூன்று பெண்பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தை திருச்செல்வமே தாங்கி வந்தார்.
இந்த நிலையில் பொரியகுளம் பகுதிக்கு வெள்ள நிலமைகள் தொடர்பாக ஆராயச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்தார்.
குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளை ஒன்றுக்கு அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதாக
உறுதியளித்தார்.
இறப்பு வீட்டுக்குச் சிறுதொகை பணத்தையும் வழங்கினார்.
0 comments:
Post a Comment