தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம். ஜி. ஆரின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்வில் எம்.ஜி. ஆரின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளும், பண உதவியும் இதன்போது வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எஸ். மயூரன், வவுனியா நகரசபை உப தலைவர்
தேசமான்ய சு. குமாரசாமி, வவுனியா வடக்கு ஆசியார் வள முகாமையாளர் சு. ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர் ஆரிப் ஆகியோர் உரைகளையும் நிகழ்த்தினர்.
வவுனியா எம். ஜி. ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா புலேந்திரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
0 comments:
Post a Comment