அஜித்- நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படம் ”விஸ்வாசம்”.
இந்தப் படம் முடிந்து சென்சார் சான்றிதழுக்காக காத்திருந்தது. தற்போது, அந்தப் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்பட்டுள்ளது. படம் - ”யு” சான்றிதழ் பெற்றுள்ளது, தயாரிப்பாளர்களை சந்தோஷப்பட வைத்துள்ளது.
அஜித்தும் கூட சந்தோஷமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் வெளியான அஜித்தின் ”வேதாளம்” படம் ”யு“ சான்றிதழ் பெற்றிருந்தது. ஆனால், ”விவேகம்” படம் ”யு/ஏ” சான்றிதழ் பெற்றிருந்தது. வேதாளம் படத்துக்குப் பின், தற்போது ”விஸ்வாசம்” படத்துக்கு ”யு” சான்றிதழ் கிடைத்திருப்பது, படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment