சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதிய விமான சேவை ஒன்றை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் சோன்ங்கிங் புதிய விமாசேவையை நேற்று இரவு அறிமுகப்படுத்தியது.
சீனாவில் மிகப்பெரிய வர்த்தக மற்றும் தொழில்துறை நகரமாக சோன்ங்கிங் உள்ளது.
சோன்ங்கிங் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து தனது புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
A- 320 neo வகையான விமானம் ஒன்று 152 பயணிகளுடனும் 11 பணியாளர்களுடனும் இலங்கையை வந்தடைந்தது.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து அடைந்ததும் வான வேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர்.
விமான நிலையத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுக்கு விமான நிலையத்தின் தலைவர் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விமான சேவையானது நேற்றிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை, புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய வாரநாட்களில் இரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த விமானம் வந்தடைந்து அன்றைய தினமே இரவு 10.10 மணியளவில் சீனாவின் சோன்ங்கிங் நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment