அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் இந்தியா

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிரடியான பல மாற்றங்களுடன் இந்தியா நாளை களமிறங்க உள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. 

தொடர்  தற்போது 1-1 என சமநிலையில் இருக்க, நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது. 

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி,  `பாக்ஸிங் டே’ என்று அழைக்கப்படும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாக்ஸிங் டே போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணி,

விராட் கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், ஹனும விஹாரி, புஜாரா, ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, பும்ரா.  


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment