8 வயதில் 40 கிலோ எடை!!

7 வயது 11 மாதங்கள் ஆன மும்பைச் சிறுமி ஸோயா, இளம் வயதில் எடைக் குறைப்பு சிகிச்சைக்கு ஆளான முதல் நபர். 39.6 கிலோ எடை இருந்த ஸோயாவுக்கு கடந்த சனிக்கிழமை இரண்டாவது முறையாக எடைக் குறைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பிறந்து 11 மாதங்களில் , 19 கிலோ எடையுடன் இருந்தார் ஸோயா. இதைத் தொடர்ந்து சிறுமிக்கு 2011- இல் பிரீச் கேண்டி மருத்துவமனையில் மருத்துவர் சஞ்சய் பொரூடே தலைமையில் அறுவை கிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சையை அடுத்து ஸோயாவின் வயிறு விரிவடைந்தது. உடலிலேயே மிகவும் நெகிழும் தன்மை கொண்டது வயிறுதான். முதல் அறுவைசிகிச்சைக்குப் பிறகு, மேற்கொள்ளப்பட வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளை ஸோயாவின் பெற்றோர் கடைபிடிக்கவில்லை.

இதையடுத்து இரண்டாவது முறை அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. பிரபல எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மோஹித் பந்தாரி ஸ்லீப் கேஸ்ட்ரக்டமி (வயிறு குறைப்பு அறுவை சிகிச்சை) என்னும் முறையைக் கையாண்டார். இதன் மூலம் வயிற்றின் எடை குறைக்கப்பட்டது.



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment