நாட்டில் கடந்த 8 மாத காலப் பகுதிக்குள் 320 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதில் 200 பாதாள உலக குழுக்களினாலும், ஏனையவை குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதவிர, ஆயுத முனையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் 252 பதிவாகியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 335 துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இதில் அதிகமானவை ரி. 56 ரக துப்பாக்கிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment