கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 60 ஆயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மக்களுக்காக விரைவாக உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெள்ளம் நீங்கும் வகையில், அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களின் அனைத்து மக்களுக்கும்சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேவையான நிதியை செயலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சின் செயலர்கள் உள்ளிட்டு அனைத்துப் பிரிவினருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கடந்த தினங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழையின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
10 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. ஓரளவுக்கு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 224 52 நலன்புரி நிலையங்களில் 3 ஆயிரத்து 332 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 332 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 31 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையை ஆராயும் பொருட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கிடையே இன்றைய தினம் சந்திப்பொன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 157 ஆகும். இவற்றில் 6 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. கால் நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசியின் ஊடாக அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான தொலைபேசி இலக்கம் 117 ஆகும் என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment