மதுபோதையில் வாகனம் செலுதினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கடந்த 13 நாள்களுக்குள் 5,000 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்யும் நடவடிக்கை, இன்றிரவு நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இவ்வருடம் மட்டும் 15,000 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
வருடத்தின் முதல் 10 மாதங்களில் மட்டும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து அறவிடப்பட்ட தண்டப் பணத்தின் மொத்தப் பெறுமதி 2,700 மில்லியன் ரூபாயாகும்.
0 comments:
Post a Comment