கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் நடித்துள்ள ”பேட்ட” படத்தின் டிரைலர் ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.
ரஜினி நடித்து வெளியான கபாலி, காலா படங்களில் இடம் பெற்ற ரஜினியைப் பார்த்து சோர்ந்து போயிருந்த அவருடைய இரசிகர்கள், இந்தப்படத்தில் தோன்றும் இளமையானவராகவும், சுறுசுறுப்பானவராகவும், ஸ்டைலிஷாகவும் தோன்றும் ரஜினியைப் பார்த்து உற்சாகமடைந்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜும் ரஜினியும் முதன் முதலாக இனைந்துள்ள இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று சொல்லப்படுகிறது.”பேட்ட” என்றைக்கு வெளியாகும் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் டிரைலரில் ”பேட்ட” ஜனவரி 10 ஆம் திகதி உலகம் முழுக்க வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டிசம்பர் 30 அன்று விஸ்வாசம் டிரைலரை வெளியிட உள்ளனர். அந்த டிரைலரிலேயே ஜனவரி 10 ஆம் திகதி விஸ்வாசம் ரிலீஸ் என்பதை அறிவிக்க உள்ளனர்.
ரஜினியின் ”பேட்ட”யும், அஜித்தின் ”விஸ்வாசம்” படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.
0 comments:
Post a Comment