துப்பாக்கிகளுடன் திடீரென ஊருக்குள் புகுந்த கும்பல் ஒன்று , அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றது.
நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நைஜீரியாவில் கும்பல்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த சில மாதங்களாக ஜம்பாரா மற்றும் கதுனா மாநிலங்களில் துப்பாக்கிகளுடன் வந்து தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.
ஜம்பாராவில் மட்டும் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அதிக அளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜம்பாரா மாநிலம், பாரு மாவட்டம் மகாமி கிராமத்தில் நேற்று முன்தினம் திடீரென நுழைந்த மர்ம நபர்கள், அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுத் தள்ளனர். இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொண்டு தாக்குதல் நடப்பதை தடுக்கும் வகையில், அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சிலரது இறுதிச்சடங்கில் மாநில பொறுப்பு ஆளுநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment