நைஜீரியாவில் குழுக்களுக்கிடையிலான மோதல் அதிகரித்துள்ளது.
ஜம்பாராவில் மட்டும் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு அதிக அளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்பாரா மாநிலம் பாரு மாவட்டம் மகாமி கிராமத்தில் சனிக்கிழமை திடீரென நுழைந்த மர்ம நபர்கள், அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சிலரது இறுதிச்சடங்கில் மாநில பொறுப்பு ஆளுநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment